Monday, 11 December 2017

Duplicate (போலி) Framed Structure



https://youtu.be/s-U6kPjusZQ
Duplicate (போலி) Framed Structure
நடைமுறையில் இன்று உள்ள கட்டுமான முறையில் புதியதாய் வீடு கட்ட என்னும் நபார்கள், நல்ல தரமுள்ள பொருட்கள் மற்றும் கட்டுமான முறையில் கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்றுதான். ஒவ்வொருவரும்  உழைக்கும் வருமானத்தில் சிறிது சிறியதாக சேமித்த பணத்தில் பல கற்பனைகளுக்கும் ஆசைகளுக்கும் இணங்க ஒரு கனவு இல்லத்தை கட்ட விரும்பாதோர் யாரும் இல்லை.
அப்படி கட்டும் மனை நல்ல பலமும் அழகும் உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெயர் சொல்லும் அளவு ஒரு வீட்டை  கட்ட ஒரு பொறியாளர் அல்லது ஒரு ஒப்பந்தக்காரர் அவர்களை நாடும் நாம் இன்னும் சில விசயங்களை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.
கட்டிடக்கலையில் எப்போது, எங்கு, எப்படி, இந்த மூடநம்பிக்கை  பிறந்தது என்று இன்னும் எம்மைபோன்று சில பொறியாளர்களுக்கு புரியவில்லை, கட்டிடத்தில் சில பகுதிகளில் கம்பி வைத்து / கம்பி வைக்காமல் கான்கிரிட் போட்டால் முகவும் பலமான கட்டிடம், அதிக எடை தங்கும் மிக உறுதியாக இருக்கும் என்று பரவலாக மேஸ்திரிகளும் கட்டிட உரிமையாளரும் நம்புவதும் அதை செய்வதும் பல ஊர்களில் நடைமுறையில் உள்ள கட்டிடங்களில் நாம் பார்க்கலாம்.
மேலும் இவர்கள் சொல்வது மற்றும் அதை செய்வது பில்லர் போட்டு கட்டிடம் கட்டனும். நம் கட்டிடத்தில் சும்மா கருங்கற்களை பயன்படுத்தி அஸ்திவரம் போடாமல் நல்ல பலமா கான்கிரிட்ல் பில்லர் அஸ்திவரம் போடணும். செலவு செய்து வீடு கட்டும் எல்லோரும் இப்படி பேசுவதும் சொல்வதும் இயல்பே, ஆனால் இப்படி நாம் செய்வது சரியா என்றால் இல்லை என்பதுவே ஒரு பொறியாளன் என்றமுறையில் எனது கருத்து மற்றும் அறிவியல் உண்மையும் அதுவே.



இதை தெளிவு செய்வதுக்கு நாம் Structure என்றால் என்ன? அதன் வகைகள், அது எங்கு பயன்படுத்தவேண்டும் என்றும் மேலும் பார்போம்.
·       Load Bearing Structure
·       Semi Load Bearing Structure
·       Framed Structure
Load Bearing Structure.
அஸ்திவாரம் மண் தோண்டி சம்பிட்டி (சக்கை/Random Rubble) கல் போட்டு செம்மண்ணில் (அஸ்திவாரம் தோண்டிய மண்) கரைத்து விடுவது அல்லது சிமன்ட் கலவையில் கரைத்து விட்டு (சிமென்ட் கலவையில் கரைக்கவேண்டிய அவசியம் இல்லை)அதன் மேல் கருங்கல் (Size Stone) கொண்டு சிமென்ட் கலவையில் கட்டி அதன் மேல் செங்கல் சுவர் கட்டுவது Load Bearing Structure. உள்ளது போல
இப்படி கட்டும் கட்டிடத்தில் கருங்கல் மேல் DPC Cource போடப்பட வேண்டும், ஆனால் அதில் கம்பி வைத்து கான்கிரீட் போட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிலர் இதனை Belt Beam/Plinth Beam என்னும் பெயரில் அவசியம் வேண்டும் என்றும் அப்பொழுதுதான் எடையை நன்கு தாங்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. இது அவசியம் அற்றது.
எப்பொழுது  Load Bearing Structure போதுமானது என்றால் தரைதளம் மற்றும் அதன் மேல் முதல்&இரண்டாம் தளம் வரை போதுமானது. ஆனால் தரைதளத்தின் அறைகள் எப்படி உள்ளதோ அதேபோன்று முதல்&இரண்டாம் தளம் அமைக்க முடியும், சிறிய மாறுதல்கள் தேவை எனில் Bed Block  மற்றும் உத்திரங்கள் (Beam) அமைத்து  மாற்றம் செய்யமுடியும். குறுக்கு வெட்டு தோற்றம் Load Bearing Structure  உள்ளது படி அமைக்கவேண்டும்.
Semi Load Bearing Structure
புட்டிங், பில்லர் (தூண்) மற்றும் Plinth Beam படத்தில் உள்ளது போல போட்டு Plinth Beamக்கு மேல் Load Bearing Structure போல  செய்வது Semi Load Bearing Structure.
எப்பொழுது  Semi Load Bearing Structure தேவை எனில் Loose மண் இருந்து கெட்டி இல்லாமல் அதிக ஆழத்திக்கு அஸ்திவாரம் தோண்டவேண்டிய தேவை இருந்தால் அல்லது அஸ்திவாரதிற்க்கும், Basementக்கும் கருங்கல் (Size Stone), கருங்கல் வேலை தெரிந்த தொழிலாளர் கிடைக்காமல் இருதாலோ இந்த முறை சிறந்தது.
Framed Structure.
புட்டிங், பில்லர் (தூண்) மற்றும் பீம்(உத்திரம்) படத்தில் உள்ளது போல போட்டு செய்வது Framed Structure.
இன்று பலர் பில்லர் போட்டு கட்டிடம் Framed Structure ஆக கட்டுவதாய் சொல்லி பில்லர் ,ப்ளிந்த் பீம் மற்றும் லிண்டல் மட்டும் போட்டு அதன் மேல் செங்கல் சுவர் அமைத்து அதன் மீது ரூப் சிலப் போட்டு விடுகின்றனர் இந்த முறை முற்றிலும் தவறான கட்டுமான முறை, Live& Dead Load Slabல் இருந்து சுவருக்கு வரும் ஆனால் அந்த கட்டிடத்தில் முதல் கதாநாயகன் பில்லர் குறைந்தபட்ச எடையை கூட தாங்குவது இல்லை, அந்த செங்கல் சுவரோ அஸ்திவாரதிற்க்கு அணைத்து Live& Dead Loadயும் கடத்தும் பில்லர் அல்ல.


Framed Structure எப்பொழுது தேவை என்றால் தரை தளத்தை விட Plinth Area அதிகமாகவும், கிழ் தளத்தை போல மேல்தளம் இல்லாமல் அறைகளின் அளவுகள் வேருபட்டலோ, குளியலறை மற்றும் கழிவறை மேல்தளதில் அமைக்கவும், இரண்டு மாடிக்கும் மேல் அடுக்கு மாடி கட்டிடமாக அமைக்க நாம் Framed Structure முறையை பயன்படுத்த வேண்டும்.
      ஒரு Framed Structure Slabக்கு வரும் முழு எடையும் படத்தில் காட்டியபடி One Way/Two Way Slab என்று அதன் அறையின் நீளம் மற்றும் அகலத்தின் அளவுகளை பொறுத்து வகைபடுத்தலாம், எடை Slabல் இருந்து Beamக்கு செல்லும், Beamல் இருந்து பில்லர்க்கு செல்லும் அதன் உதாரணம் படத்தில் கட்டப்பட்டுள்ளது



சரியாக Framed Structure அமைத்து கட்டிடம் கட்டாமல் வெறும் பில்லர் மட்டும் போட்டு சிலப் மட்டத்தில் L Beam/T Beam இல்லாமல் கட்டும் கட்டிடத்தில் பில்லர் போட பயன்படுத்தும் கம்பி, கான்கிரிட் அதன் பொருள் மற்றும் வேலை ஆட்கள் என மொத்தச் செலவுகளும் பயன்அற்றதே,

Framed Structure அமைக்க கட்டிடத்தின் வரைபடம் தயார் செய்து அதை ஒரு Structural Engineer கொடுக்கும் கம்பி, கான்ககிரீட் அளவுகள்படி அமைக்க வேண்டும், இன்னும் சிலர் தொலைபேசியில் இந்த வடிவம் உள்ள Room Sizeக்கும், Beam, Columnக்கும் என்ன கம்பி, கான்கிரீட் என்ன Section Size போட வேண்டும் என்று கேட்கின்றனர், இந்த கேள்விகளுக்கு மனகணக்கில் மதிப்பிட்டு சொல்ல முடியாது, கட்டிடதிற்க்கு கட்டிடம், அதன் அளவு, பயன்பாடு, அமைந்துள்ள இடத்திற்க்கு தகுந்து காரணிகள் மாறுபடும் மற்றும் கணக்கிடுகளை இந்திய தரசான்று நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி கணக்கிட்டு பதில் சொல்லவேண்டும் அதற்க்கு சில மணிநேரங்கள் ஆகும்,  இவைகள் IS 456-2000 என்ற இந்திய தரசான்று நிறுவனத்தின் புத்தகத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.     


No comments:

Post a Comment